மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த வங்கி சட்டங்கள் திருத்த மசோதா மக்களவையில் இன்று நிறைவேறியது. ரிசர்வ் வங்கி சட்டம் 1934, வங்கி ஒழுங்குமுறை சட்டம் 1949, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா சட்டம் 1955, வங்கி நிறுவனங்கள் பங்கீடுகளை கையகப்படுத்துதல் மற்றும் மாற்றுதல் சட்டம் உள்ளிட்டவற்றில் 19 திருத்தங்கள் முன்மொழியப்பட்டுள்ளது. வங்கி சட்டங்கள் திருத்த மசோதா வங்கித் துறையின் நிர்வாகத்தை வலுப்படுத்துவதுடன், வாடிக்கையாளர் வசதியை மேம்படுத்தும் என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். […]