உணவுப் பொருளில் உள்ள ஊட்டச்சத்துக்களைக் குறிக்கும் நியூட்ரி-மார்க் லேபிள்கள் அனைத்து உணவுப் பாக்கெட்டுகள் மீதும் கட்டாயம் இடம்பெற வேண்டும் என்று அபுதாபியில் உள்ள தரக் கட்டுப்பாடு மற்றும் சுகாதார அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். 2025ம் ஆண்டு ஜூன் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை கட்டாயமாக்கப்படும் என்று தெரிவித்துள்ள அவர்கள் நியூட்ரி-மார்க் லேபிளுடன் கூடிய புதிய பாக்கெட்டுகளை தயாரிக்க ஆறு மாத காலம் அவகாசம் வழங்கியுள்ளனர். அதன்பின், நியூட்ரி-மார்க் லேபிள் இல்லாத உணவுப் பாக்கெட்டுகள் கடைகளில் இருந்து அகற்றப்படும் […]