AusvInd : 'இரண்டாவது டெஸ்ட்டிலும் அஷ்வினுக்கு அணியில் இடம் கிடையாதா?' – இந்திய அணியின் திட்டம் என்ன?

பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் போட்டி பெர்த்தில் நடந்திருந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. இந்திய அணியின் ப்ளேயிங் லெவனில் அஷ்வின், ஜடேஜா என இரண்டு முக்கிய ஸ்பின்னர்களுமே இல்லாமல் இருந்தனர். இந்நிலையில், இரண்டாவது டெஸ்ட் போட்டியிலுமே இவர்கள் இருவரும் ப்ளேயிங் லெவனில் இருக்கமாட்டார்கள் என தகவல் வெளியாகியிருக்கிறது.

Washington Sundar

முதல் டெஸ்ட் போட்டியில் அஷ்வின் ஆட வேண்டிய இடத்தில் வாஷிங்டன் சுந்தர் ஆடியிருந்தார். மேலும், ஒரே ஒரு ஸ்பின்னர் போதும் என முடிவெடுத்துவிட்டதால் ஜடேஜாவும் பென்ச்சில்தான் வைக்கப்பட்டிருந்தார். அவருக்குப் பதில் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான நிதிஷ் ரெட்டி லெவனில் இடம்பிடித்திருந்தார். இப்போதைய நிலவரப்படி, இரண்டாவது டெஸ்ட்டிலும் அஷ்வினையும் ஜடேஜாவையும் பென்ச்சில் வைக்கும் முடிவிலேயே கம்பீரும் ரோஹித்தும் இருப்பதாக சொல்லப்படுகிறது. Winning Combination ஐ மாற்ற வேண்டாம் என்பது ஒரு காரணமாக இருக்கலாம். அதுபோக, வாஷிங்டன் சுந்தரை பார்டர் கவாஸ்கர் தொடரை மனதில் வைத்துதான் 3 ஆண்டுகள் கழித்து டெஸ்ட் அணிக்கு அழைப்பு விடுத்தார்கள்.

நியூசிலாந்துக்கு எதிராக கம்பேக் கொடுத்த டெஸ்ட்டில் 11 விக்கெட்டுகளை வீழ்த்தி தேர்வாளர்களை கவர்ந்துவிட்டார். அந்த செயல்பாட்டின் வழிதான் ஆஸ்திரேலியாவில் முதல் போட்டியிலேயே அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் ஓரளவுக்கு நன்றாகவும் ஆடியிருக்கிறார். ஸ்பின்னுக்கு பெரிதாக முக்கியத்துவம் இல்லாத போதும் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். இரண்டாவது இன்னிங்ஸில் கோலியோடு நின்று 94 பந்துகளுக்கு ஒரு நிதானமான இன்னிங்ஸை ஆடியிருப்பார். அதுபோக மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த ப்ரைம் மினிஸ்டர் லெவனுக்கு எதிரான பிங்க்பால் போட்டியில் நாட் அவுட்டாக 42 ரன்களை அடித்திருந்தார். இதையெல்லாம் வைத்துதான் அஷ்வினை தொடர்ந்து பென்ச்சிலேயே வைத்திருக்க அணி நிர்வாகம் முடிவெடுத்திருப்பதாக தெரிகிறது.

Ravichandran Ashwin

அஷ்வின் தன்னுடைய கரியரின் கடைசிக்கட்டத்தில் இருக்கிறார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக எப்போதுமே சிறப்பாக செயல்படக்கூடியவர். இதுதான் அவரது கரியரின் கடைசி ஆஸ்திரேலிய சுற்றுப்பயணமாக இருக்கக்கூடும். அதில் அவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காமல் இருப்பது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியிருக்கிறது.!

நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…

https://bit.ly/TATAStoryepi01

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.