Flipkart Big Bachat Sale: ஆன்லைன் விற்பனை தளமான ஃப்ளிப்கார்ட் மீண்டும் அதிக தள்ளுபடிகள் மற்றும் சலுகைகளை அளிக்கும் ஃபிளிக்ப்கார்ட் பிக் பசத் சேலை கொண்டு வந்துள்ளது. இந்த விற்பனையில், ஸ்மார்ட்போன்கள், பல கேஜெட்டுகள் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்களுக்கு பம்பர் தள்ளுபடிகள் வழங்கப்படுகின்றன. புதிய போன் வாங்குவது பற்றி நீங்களும் யோதித்துக்கொண்டு இருந்தால், இதுதான் அதற்கான சரியான நேரமாக இருக்கும்.
குறைந்த பட்ஜெட்டில் அசத்தல் ஸ்மார்ட்போன்
உங்கள் பட்ஜெட் ரூ.10,000 அல்லது அதற்கும் குறைவாக இருந்து, நீங்கள் நேர்த்தியான, சக்திவாய்ந்த 5G ஃபோனை வாங்க திட்டமிட்டுள்ளீர்கள் என்றால், இது உங்களுக்கான நல்ல வாய்ப்பு. பிளிப்கார்ட்டில் கிடைக்கும் 3 சிறந்த 5G போன்கள் பற்றி இந்த பதிவில் காணலாம். இதில் சாம்சங் முதல் லாவா வரையிலான சிறந்த போன்கள் உள்ளன. அவற்றை பற்றி பார்க்கலாம்.
Infinix Hot 50 5G: இன்ஃபினிக்ஸ் ஹாட் 5ஜி
இந்த பட்டியலில் முதல் ஃபோன் Infinix Hot 50 5G. இந்த சேலில் இதன் விலை ரூ.9,999 ஆக உள்ளது. ஆனால், இந்த போனின் வெளியீட்டு விலை ரூ.12,999. அதன்படி, போனுக்கு 23% வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதுமட்டுமின்றி, AXIS வங்கியின் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் மூலம் போனை வாங்க பணம் செலுத்தினால், போனில் ரூ.1,000 கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. ஃபோனில் 4 ஜிபி ரேம், 6.7 இன்ச் எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் 48 எம்பி+ டெப்த் சென்சார் கொண்ட 8 எம்பி முன்பக்க கேமரா உள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5000 mAh பேட்டரி மற்றும் டைமன்சிட்டி 6300 செயலியைக் கொண்டுள்ளது.
Lava Blaze 2 5G: லாவா பிளேஸ் 2 5ஜி
லாவாவின் இந்த போனும் Flipkart Big Bachat Sale -இல் ரூ.9,698 -க்கு கிடைக்கிறது. நிறுவனம் இதை ரூ.11,499 க்கு அறிமுகப்படுத்தியது. அதன்படி போனில் 15% வரை தள்ளுபடி கிடைக்கிறது. விற்பனையின் போது, HDFC வங்கி கிரெடிட் கார்டு EMI மூலம் 1500 ரூபாய் வரை சேமிக்கலாம். இதன் மூலம் போனின் விலை கணிசமாகக் குறைக்கப்படுகின்றது. சாதனம் 50 எம்பி பின்புற கேமராவுடன் 4 ஜிபி ரேம், 6.56 இன்ச் முழு எச்டி+ டிஸ்ப்ளே மற்றும் 5000எம்ஏஎச் பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
Samsung Galaxy A14 5G: சாம்சங் கேலக்சி ஏ14 5ஜி
பட்டியலில் உள்ள கடைசி ஃபோன் SAMSUNG Galaxy A14 5G ஆகும். இது இந்த பிளிப்கார்ட் விற்பனையில் வெறும் ரூ.10,999 க்கு கிடைக்கிறது. ஆனால், அதன் உண்மையான விலை ரூ 20,999 ஆகும். அதாவது இந்த போனில் ரூ.10,000 என்ற பெரிய தள்ளுபடி கிடைக்கிறது. இருப்பினும், இந்த போனை ரூ.10,000க்கு குறைவாக வாங்க விரும்பினால், பரிமாற்ற சலுகை அதாவது எக்ஸ்சேஞ்ச் சலுகையைப் பயன்படுத்தலாம். அதன் பிறகு நீங்கள் போனில் ரூ.3 ஆயிரம் அல்லது அதற்கு மேல் சேமிக்க முடியும். இந்த ஃபோனில் 6 ஜிபி ரேம், 6.6 இன்ச் ஃபுல் எச்டி + டிஸ்ப்ளே மற்றும் 50 எம்பி + 2 எம்பி + 2 எம்பி பின்புற மற்றும் 13 எம்பி முன்பக்க கேமரா உள்ளது.