காங்கிரஸ் எம்.பி. சசி தரூர் தனது எக்ஸ் பக்கத்தில் குரங்கு குறித்து பதிவிட்டிருந்தப் பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
காங்கிரஸ் எம்.பி சசி தரூர் அவரது வீட்டில் செய்தித்தாள் படித்துக்கொண்டிருக்கும்போது குரங்கு ஒன்று அங்கு சுற்றிக்கொண்டிருந்திருக்கிறது. பின்பு அந்த குரங்கு அவர் தோளில் சாய்ந்து உறங்கி இருக்கிறது. குரங்குடன் எடுத்த புகைப்படங்களைப் பகிர்ந்து பதிவு ஒன்றைப் பதிவிட்டிருக்கிறார் சசி தரூர். அவர் வெளியிட்டிருந்தப் பதிவில், “இன்று ஒரு அற்புதமான அனுபவம் கிடைத்தது.
என்னுடைய கார்டனில் அமர்ந்து செய்தித்தாள் படித்துக்கொண்டிருந்தேன். அப்பொழுது குரங்கு ஒன்று அங்கே சுற்றிக் கொண்டிருந்தது. அந்தக் குரங்கு நேராக எனது மடி மீது ஏறி உட்கார்ந்து கொண்டது. பசியுடன் இருந்த அந்த குரங்கு, நாங்கள் கொடுத்த வாழைப்பழத்தை நன்றாக சாப்பிட்டது. அரவணைப்பாக அதன் தலையை என் தோள் மீது சாய்த்து உறங்கியே விட்டது” என்று நெகிழ்ச்சியாகப் பகிர்ந்திருக்கிறார்.