அடிலெய்டு,
ஆஸ்திரேலியாவுக்கு சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி ‘பார்டர்- கவாஸ்கர்’ கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் பெர்த்தில் நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.
இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் பகல்-இரவு போட்டியாக நடத்தப்படுகிறது. இந்த டெஸ்ட் அடிலெய்டில் நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த போட்டிக்கான ஆஸ்திரேலியாவின் ஆடும் அணி (பிளேயிங் 11) அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் போட்டியில் இடம்பெற்றிருந்த வீரர்களில் 10 பேர் மாற்றமின்றி தொடருகின்றனர். ஒரே மாற்றமாக காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் ஹேசில்வுட்டுக்கு பதிலாக ஸ்காட் போலந்து அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலிய அணியின் பிளேயிங் 11 விவரம் பின்வருமாறு:-
உஸ்மான் கவாஜா, நாதன் மெக்ஸ்வீனி, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவ் சுமித், டிராவிஸ் ஹெட், மிட்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லயன் மற்றும் ஸ்காட் போலந்து.