கிளிநொச்சி மாவட்டத்தில் மாபெரும் தொழிற்சந்தை நிகழ்வு நாளை (06) கிளிநொச்சி பழைய மாவட்டச் செயலக வளாகத்தில் காலை 9.30 மணி தொடக்கம் 3.30 மணி வரை நடைபெறவுள்ளது.
கிளிநொச்சி மாவட்டச் செயலகம் மற்றும் மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களம் இணைந்து நடாத்தும் இந்நிகழ்வில் 30ற்கும் மேற்பட்ட அரசசார்பற்ற தனியார் நிறுவனங்கள், மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களும் கலந்துகொண்டு தொழில் வாய்ப்பினை வழங்கவுள்ளன.
இந்நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் தேடும் இளைஞர், யுவதிகள் அனைவரும் கலந்து கொண்டு பயனை பெற்றுக் கொள்ள முடியும்.
நாளைய தினம் தொழில் பயிற்சி நெறியில் இணைய விரும்புகின்ற மாணவர்கள் அதற்கான தொழில் வழிகாட்டல் ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ள முடியும்.
மேலும் தொழில் வாய்ப்பினை வழங்க விரும்பும் நிறுவனங்களும் கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் உள்ள மனிதவலு வேலைவாய்ப்புத் திணைக்களத்தின் தொழில் நிலையத்துடன் (0212283739) தொடர்பு கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்ட செயலாளர் சு.முரளிதரன் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.