சென்னை: தாம்பரம் அருகே பல்லாவரம் பகுதியில் கழிவுநீர் கலந்து வந்த குடிநீரை குடித்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது. இந்த சாவுக்கு காரணமாக கழிவுநீர் கலந்த குடிநீர்தான் என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டி வரும் நிலையில், அதை அமைச்சர் தா.மோ.அன்பரசன் மறுத்துள்ளார். தாம்பரம் மாநகராட்சி 13வது வார்டுக்குட்பட்ட காமராஜ் நகர் கன்டோன்மென்ட் பல்லாவரம் மலைமேடு பகுதியில் குடிநீரில் கழிவுநீர் கலந்து வந்துள்ளது. தொடர் மழை காரணமாக, இதை அறியாமல் குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, பேதி […]