டபிள்யூ.எம். மெண்டிஸ் நிறுவனத்தின் மதுபான உற்பத்தி அனுமதிப்பத்திரத்தை இன்று (05) முதல் இடைநிறுத்துவதற்கு கலால்வரித் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கலால்வரித் திணைக்களத்திற்கு செலுத்த வேண்டிய 5.7 பில்லியன் ரூபாய் தொகையை செலுத்தாத காரணத்தினால் இந் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அத் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.