பொற்கோவிலில் நேற்று சேவை செய்த பஞ்சாப் முன்னாள் துணை முதல்வர் சுக்பீர் பாதல் மீது முன்னாள் காலிஸ்தானி பயங்கரவாதி ஒருவன் அருகில் இருந்து துப்பாக்கியால் சுட்டதில் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினார். இந்த நிலையில் இன்று அவர் ரூப்நகர் மாவட்டத்தில் உள்ள தக்த் கேஸ்கர் சாஹிப்பில் சேவை செய்து வருகிறார். 2007 முதல் 2017 வரை பஞ்சாபில் ஷிரோமணி அகாலி தள அரசும் சுக்பீர் பாதல் கட்சியும் செய்த தவறுகளுக்காக, சீக்கியர்களின் மத அமைப்பான அகல் தக்த் அவருக்கு […]