உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்களால் பயன்படுத்தப்படும் கூகுள் மேப்ஸ் முன்பின் தெரியாத இடத்திற்கு செல்கையில், வழித்தடம் பற்றிய தகவல்களை அறிய பெரிதும் உதவியாக உள்ளது. முன்பெல்லாம், புதிய இடத்திற்கு செல்கையில் அருகில் இருக்கும் கடைகள் அல்லது வழியில் காணும் நபர்களிடம், எப்படி செல்ல வேண்டும் என்று வழி கேட்போம். ஆனால் இப்பொழுது கையில் ஒரு ஸ்மார்ட்போன் இருந்தால் போதும். கூகுள் மேப்ஸ் உதவியுடன் எங்கே வேண்டுமானாலும் செல்லலாம். ஆனால், அவ்வப்போது கூகுள் தவறான வழி காட்டுவதினால் பெரும் விபத்துக்களை நேருகின்றன என்பதையும் மறுக்க இயலாது
சமீபத்திய சோகமான சம்பவம், கூகுள் மேப்ஸின் நம்பகத்தன்மை குறித்து பல கேள்விகளை எழுப்பியுள்ளது. குருகிராமில் இருந்து பரேலிக்கு செல்லும் கார் ஒன்று கூகுள் மேப்ஸ் மூலம் பாதையை தேர்ந்தெடுத்து செல்கையில், முழுமையாக முடிக்கப்படாத பாலத்தின் மீது ஏறியதால் அந்த கார் ராமகங்கா ஆற்றில் விழுந்து 3 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் கூகுள் மேப்ஸ் முற்றிலும் பாதுகாப்பானதா மற்றும் சரியான பாதையை காட்டுகிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.
எனவே, நாம் Google வரைபடத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டுமா அல்லது ஏதேனும் இந்திய மேப் செயலியை பயன்படுத்தலாமா என்ற கேள்வியும் எழுகிறது. தற்போது சந்தையில் ஒரு இந்திய செயலி உள்ளது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பின் (இஸ்ரோ) பிராந்திய வழிசெலுத்தல் செயற்கைக்கோள் அமைப்பான ‘நேவிகேஷன் வித் இந்தியன் கான்ஸ்டலேஷன்’ (NavIC) மூலம் Mappls செயலி செயல்படுகிறது. கூகுள் மேப்ஸுக்குப் பதிலாக வேறு ஏதேனும் ஆப்ஸைப் பயன்படுத்த விரும்பினால், நிகழ்நேர டேட்டா அப்டேட்களின் அம்சத்துடன் இந்த நேவிகேஷன் ஆப்ஸை முயற்சிக்கலாம்.
இந்தியாவின் பிரபலமான வழிகாட்டும் செயலியான ‘Mappls Mapmyindia’ செயலியின் அம்சங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம்
இந்திய பயனர்களுக்காக வடிவமைக்கப்பட்டது:
Mappls Mapmyindia ஆனது, இந்திய பயனர்களின் தேவைகளை மனதில் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது, அதாவது பள்ளங்கள், சாலை கட்டுமான பணிகள், சுங்கச்சாவடிகள், பெட்ரோல் பம்புகள் மற்றும் ஏடிஎம்கள் பற்றிய தகவல்கள் இந்த செயலியில் கிடைக்கும்.
இந்திய சாலைகள் பற்றிய ஆழமான புரிதல்:
Mappls Mapmyindia இந்தியாவின் சாலைகள் மற்றும் போக்குவரத்தை நன்கு புரிந்து கொண்டுள்ளது. இந்தியாவில் புதிய நெடுஞ்சாலைகள் மற்றும் அதிவேக நெடுஞ்சாலைகள் கட்டப்பட்டு வருகின்றன. இது தவிர, உள்ளூர் சாலைகள் மற்றும் தெருக்களிலும் மேம்பாட்டு பணிகள் தொடர்கிறது. இவை அனைத்தையும் மனதில் வைத்து, இந்த ஆப் அதன் தரவுத்தளத்தை புதுப்பித்துக்கொண்டே இருக்கிறது.இந்த செயலி பிரதான சாலையைப் பற்றி மட்டுமல்ல, சிறிய தெருக்கள் மற்றும் சந்துகள் பற்றிய விரிவான தகவலை வழங்குகிறது.
உள்ளூர் மொழி பயன்பாடு:
இந்தியாவின் செயலி பல இந்திய மொழிகளில் சேவைகளை வழங்குகிறது. இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்கள் மற்றும் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு இதனை பயன்படுத்துவது எளிதாக இருக்கும்.
ஆஃப்லைன் வரைபடங்கள்:
இந்த செயலியில் நீங்கள் ஆஃப்லைன் வரைபடங்களைப் பதிவிறக்கலாம், இதன் மூலம் இணைய இணைப்பு இல்லாதபோதும் நீங்கள் எளிதாக செல்லலாம்.