தொகுப்பாளராக இருந்து நம்மிடையே கவனம் பெற்றவர் மனிமேகலை.
இவரும் இவரின் கணவர் ஹுசைனும் இணைந்து யூட்யூபில் பதிவிடும் வீடியோ மக்களுக்கு அவ்வளவு ஃபேவரைட். இந்த தம்பதி தற்போது சென்னையில் புதிதாக வீடு ஒன்றை வாங்கியிருக்கிறார்கள். இது தொடர்பாக நெகிழ்ந்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் மணிமேகலை
வீடு வாங்கியது பற்றி மணிமேகலை, “எங்களுக்கு திருமணமான முதல் நாளிலிருந்து எங்களைப் பற்றி உங்களுக்கு தெரியும். எங்களுக்கு திருமணமான முதல் ஆண்டில் 10 ஆயிரம் ரூபாய் வீட்டிற்கு வாடகை கொடுக்க முடியாமல் கஷ்டத்தை சந்தித்தோம். இன்று சென்னையின் முக்கியப் பகுதியில் இருக்கும் ஒரு பிரிமீயம் அப்பார்ட்மென்ட் வீடு வாங்கியிருக்கிறோம். இது எங்களுடைய பெரிய கனவு மற்றும் நாங்கள் செய்த சாதனை.
ஜீரோவிலிருந்து வாழ்க்கையை தொடங்கி எந்தவித உறுதுணையும் இல்லாமல் வாழ்க்கையை நடத்திக் கொண்டுச் சென்றது எங்களை வலிமையாக்கி நம்பிக்கையை விதைத்தது. நாளை எங்களுடைய திருமண நாளை நாங்கள் கொண்டாடவிருக்கிறோம். இதே வாரத்தில் எங்களுடைய மகிழ்ச்சியை உங்களுடன் பகிர்வதில் எங்களுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த வீட்டினை 2021-ல் புக் செய்துவிட்டோம். எங்களின் கைகளுக்கு வீடு வருவதற்காக நாங்கள் காத்திருந்தோம். இறுதியாக அந்த நாளும் வந்துவிட்டது. நாங்கள் அதற்காக கனவுக் கண்டு, கடினமாக உழைத்தோம். இப்போது கடவுள் இந்த வாழ்நாள் பரிசை எங்களுக்கு வழங்கியிருக்கிறார். ” எனப் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…