Relaince Jio Prepaid Plans With OTT Benefits: இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ரிலையன்ஸ் ஜியோ, கடந்த ஜூலையில் கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது. மேலும், தனது வாடிக்கையாளர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்க நெட்வொர்க்கை விரிவுபடுத்துவதிலும் மேம்படுத்துவதிலும் தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
கடந்த 2024 ஜூலை மாதத்தில், ஜியோ பல திட்டங்களின் கட்டணத்தை 15 சதவீதம் அதிகரித்த நிலையில், பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத்தொடங்கினர். இதனை தடுக்க ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் அவ்வப்போது சிறந்த திட்டங்களையும் சலுகைகளையும் அறிவித்து வருகின்றன. அந்த வகையில், டேட்டா நன்மைகளுடன் OTT பலன்களையும் கொடுக்கும் சிறந்த திட்டத்தை அறிந்து கொள்ளலாம்
OTTக்கான தேவை
தற்போது OTT சேனல்களை பார்ப்பவர்களின் எண்ணீக்கை அதிகரித்துள்ளதை நாம் அறிவோம். எனவே, ஜியோ வெவ்வேறு பயனர்களின் தேவைகளுக்கு ஏற்ப வெவ்வேறு திட்டங்களைக் கொண்டுவருகிறது. இவற்றில் சில திட்டங்களுடன் நீங்கள் ஜியோசினிமா மற்றும் சோனி லிவ் போன்ற பிரபலமான OTT தளங்களுக்கான இலவச சந்தாவைப் பெறுவீர்கள். ஜியோவின் ரூ.1049 கட்டணத்திலான திட்டத்தில் Sony Liv மற்றும் Zee5 சேனல்களுடன் உடன் வரம்பற்ற அழைப்புகள், வரம்பற்ற 5G டேட்டா மற்றும் பல இலவச சந்தா நன்மைகளைப் பெறுவீர்கள்.
84 நாட்கள் வேலிடிட்டி கொண்ட இந்த திட்டத்தில் தினமும் 2ஜிபி 5ஜி டேட்டா, வரம்பற்ற குரல் அழைப்புகள் மற்றும் 100 எஸ்எம்எஸ்கள் . இதனுடன், இந்தத் திட்டத்தில் பல OTT இயங்குதளங்களின் பலன்களைப் பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம், JioCinema மற்றும் JioCloud வசதியை பெறுவதற்கான சந்தாவுடன் JioTV, Sony LIV மற்றும் Zee5 ஆகியவற்றுக்கான அணுகலைப் பெறுவீர்கள்.
நீங்கள் தனியாக ஓடிடி சேனல்களுக்கு சந்தா செலுத்தும் போது, Sonyliv பிரீமியம் மாதாந்திரத் திட்டத்திற்கு 299 ரூபாய் செலுத்த வேண்டும். Zee5 சேனலின் அடிப்படை 3 மாதத் திட்டதிற்கான கட்டணம் ரூ.199 ஆகும். மேலும் இதனை இதை நீங்கள் போனில் மட்டுமே பயன்படுத்த முடியும். இந்நிலையில், ஜியோவின் இந்த திட்டம் ஆல் இன் ஒன் பிளானாக செயல்படும், இதில் நீங்கள் வரம்பற்ற டேட்டா, குரல் அழைப்புகள் மற்றும் பொழுதுபோக்கு அம்சம் ஆகியவற்றைப் பெறுவீர்கள்.