சென்னை: ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ திட்டத்தின்கீழ் ரூ.3,555 கோடியில் 483 பணிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்து உள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில், அனைத்து எம்எல்ஏக்களும் தங்களது சட்டப்பேரவை தொகுதியில் நீண்டகாலமாக நிறைவேற்றப்படாத 10 முக்கிய கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அனுப்பி வைக்குமாறு கடந்த 2022 ஆக. 22-ம் தேதி முதல்வர் கடிதம் எழுதினார். இந்த திட்டத்துக்கான அரசாணை 2022 செப்டம்பரில் வெளியிடப்பட்டது. அதன்படி, மாவட்ட ஆட்சியர் தலைமையில் […]