ஜனாதிபதி செயலகத்தின் நிதியுதவியுடன் கடற்படையின் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திப் பிரிவு மற்றும் கடற்படை சமூக நலத் திட்டத்தினால் நிர்மானிக்கப்பட்ட 31 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தில் 31 இடங்களில் நிறுவும் விசேட திட்டத்தின் கீழ், ஹொரொவ்பதான பிரதேச செயலகப் பிரிவின் கம்மஹெகெவெவ ஸ்ரீ போத்திருக்காராம விஹாரயத்தில் மற்றும் பதவிய அருணகம ஸ்ரீ ஷைலத்தலாராம விஹாரயத்தில் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2024 டிசம்பர் 05 ஆம் திகதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டன.
இதன்படி, இந்த விசேட திட்டத்தின் கீழ் இது வரை 09 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளதுடன், மேலும் 22 நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அனுராதபுரம் மாவட்டத்தின், கல்னாவ, தம்புத்தேகம, கெக்கிராவ, தலாவ, கஹட்டகஸ்திகிலிய, நொச்சியாகம மற்றும் திரப்பனை ஆகிய பிரதேச செயலகங்களில் நிறுவப்படவுள்ளன