படையணிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி – 2024 இல் பிரதம விருந்தினராக இராணுவத் தளபதி

படையணிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி – 2024 இன் விருது வழங்கும் நிகழ்வு கிராண்ட் மைட்லேண்டில் 03 டிசம்பர் 2024 அன்று நடைபெற்றது. இந்நிகழ்வில் இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் விக்கும் லியனகே ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டியூ அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

2024 ஆம் ஆண்டில், நாடு முழுவதும் உள்ள பல்வேறு படையணி தலைமையகங்களில் 29 படையணிகளுக்கு இடையேயான விளையாட்டு போட்டிகள் நடாத்தப்பட்டன. விளையாட்டு பணிப்பகத்தின் பணிப்பாளர் பிரிகேடியர் எல்.கே.டி. பெர்னாண்டோ ஆர்எஸ்பீ யூஎஸ்பீ அவர்கள் மைதானத்திற்கு வருகை தந்த இராணுவத் தளபதியை மரியாதையுடன் வரவேற்றார்.

இராணுவ பாடல் பாடப்பட்டதுடன் நிகழ்வு ஆரம்பமாகியது, அதனைத் தொடர்ந்து உயிர்நீத்த போர்வீரர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை சிங்க படையணியின் படைத் தளபதியும் இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவருமான மேஜர் ஜெனரல் டப்ளியூபீஏடிடப்ளியூ நாணயக்கார ஆர்எஸ்பீ வீஎஸ்வீ யூஎஸ்பீ என்டியூ அவர்களினால் வரவேற்பு உரை நிகழ்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மேற்கு பாதுகாப்பு படை தலைமையக தளபதியும் இலங்கை பொறியியல் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் ஏஎச்எல்ஜீ அமரபால ஆர்டபிள்யூபீ ஆர்எஸ்பீ என்டிசீ பீஎஸ்சீ அவர்களினால் முதல் விருது வழங்கிவைக்கப்பட்டது.

பின்னர், பிரதி இராணுவ பதவி நிலை பிரதானியும் இலங்கை பீரங்கிப் படையணியின் படைத் தளபதியுமான மேஜர் ஜெனரல் பிகேஜீஎம்எல் ரொட்ரிகோ ஆர்எஸ்பீ பீஎஸ்சீ ஐஜீ அவர்கள் வெற்றியாளர்களுக்கு வெற்றிக்கி ண்ணங்களை வழங்கினார்.

தொடர்ந்து, பல்வேறு நிகழ்வுகளில் இரண்டாம் இடம் பெற்ற வீரர்களுக்கு இராணுவ விளையாட்டுக் குழுத் தலைவர் விருதுகள் மற்றும் கிண்ணங்களை வழங்கினார்.

பின்னர், படையணிகளுக்கிடையிலான விளையாட்டு போட்டி – 2024 இல் சாம்பியனான படையணிகளுக்கு கிண்ணங்களை வழங்க இராணுவத் தளபதி அழைக்கப்பட்டார், மேலும் அண்மையில் இந்த ஆண்டில் சர்வதேச சாதனை படைத்த விளையாட்டு வீர வீராங்கனைகளுக்கான பண ஊக்குவிப்புகளும் வழங்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து இராணுவ விளையாட்டுக் குழுவின் தலைவர் இராணுவத் தளபதிக்கு விசேட நினைவுச் சின்னமொன்றை வழங்கி இந்நிகழ்வில் கலந்துகொண்டமைக்கு பாராட்டு தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.