ஜமைக்கா,
வங்காளதேச கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸ்க்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடர் 1-1 என சமனில் முடிந்தது.
டெஸ்ட் தொடர் நிறைவடைந்ததை அடுத்து ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளன. ஒருநாள் போட்டிகள் முறையே டிசம்பர் 8, 10, 12ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதையடுத்து வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடருக்கான வெஸ்ட் இண்டீஸ் அணி சில தினங்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டது.
இந்த அணிக்கு ஷாய் ஹோப் கேப்டனாகவும், பிரண்டன் கிங் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இந்த அணியில் இடம் பெற்றிருந்த முன்னணி வீரர்களான மேத்யூ போர்டே மற்றும் ஷமர் ஜோசப் ஆகியோர் இந்த தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காயம் காரணமாக அவர்கள் இருவரும் வங்காளதேசத்திற்கு எதிரான ஒருநாள் தொடரில் ஆட மாட்டார்கள் எனவும், அவர்களுக்கு பதிலாக மார்க்வினோ மைண்ட்லி, ஜெடியா பிளேட்ஸ் ஆகியோர் வெஸ்ட் இண்டீஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெஸ்ட் இண்டீஸ் அணி விவரம்; ஷாய் ஹோப் (கேப்டன்), பிரண்டன் கிங் (துணை கேப்டன்), ஜெடியா பிளேட்ஸ், கேசி கார்டி, ரோஸ்டன் சேஸ், ஜஸ்டின் க்ரீவஸ், ஷிம்ரன் ஹெட்மையர், அமிர் ஜாங்ஹோ (விக்கெட் கீப்பர்), அல்ஜாரி ஜோசப், எவின் லூயிஸ், மார்க்வினோ மைண்ட்லி, குடகேஷ் மோடி, ஷென்பேன் ரூதர்போர்டு, ஜெய்டன் சீல்ஸ், ரொமாரியோ ஷெப்பர்ட்.