கார் கடனை வசூலிக்கும் முகவரை கடிக்க கட்டிவைக்கப்பட்டிருந்த தனது ஜெர்மன் ஷெப்பர்ட் நாயை விழ்த்துவிட்டதாக 29 வயது பெண்ணை கோவை நகர போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர். இந்த சம்பவத்தில், ஜெகதீஷ் (45) என்பவரை உடல்முழுவதும் பலஇடங்களில் அந்த நாய் கடித்துள்ளது. வெள்ளலூர் மகாகணபதி நகரில் உள்ள தனியார் நிறுவன ஊழியர் மணிகண்டன் (32) என்பவர் 2020ம் ஆண்டு வாங்கிய காருக்கான கடனை திருப்பிச் செலுத்தத் தவறியதாகக் கூறப்படுகிறது. கடந்த 20 மாதங்களாக தொலைபேசியிலும் தனிப்பட்ட முறையிலும் […]