ஜனவரி முதலாம் திகதியிலிருந்து 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வர்த்தக விளம்பரங்களில் பயன்படுத்துவதற்குத் தடை

ஜனவரி 01ஆம் திகதியிலிருந்து 12 வயதிற்கு உட்பட்ட சிறுவர்களை வர்த்தக விளம்பரங்களுக்கு பயன்படுத்துவதை தடை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக பிரதி அமைச்சர் வைத்தியர் ஹசங்க விஜேமுணி தெரிவித்தார்.

அதற்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியிடுவதற்கு சகல நடவடிக்கைகளும் தற்போது எடுக்கப்பட்டுள்ளதாக நேற்று (06) பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்தும் உரையாற்றிய பிரதி அமைச்சர்; 

கடந்த அரசாங்கங்களில் ஏழு, எட்டு வருடங்கள் வரை பின்தள்ளி போடப்பட்டதாகவும், நாங்கள் இதனை பிற்போடாது எதிர்வரும் ஜனவரி முதலாம் திகதியிலிருந்தே நடைமுறைப்படுத்துவதற்கு கடந்த வாரத்தில் தீர்மானித்தோம்” என பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுணி வலியுறுத்தினார்.

 

 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.