சென்னை இன்று மின்சார ரயில் சேவை மாறுதல்களால் சென்னை தாம்பரத்தில் இருந்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு இடையிலான மின்சார ரெயில்கள் இன்று (08.12.2024) முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் மறு அறிவிப்பு வரும் வரை கால அட்டவணை மாற்றம் செய்து இயக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பினை தொடர்ந்து, மாநகர் போக்குவரத்துக் கழகத்தில், இன்று முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் பயணிகள் […]
