மேட்டூர்: மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 9,601 கனஅடியாக சரிந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இருக்கும். தற்போது காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழை குறைந்துள்ளளதால், அணைக்கு நீர்வரத்து சரியத் தொடங்கியுள்ளது.
மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 14,404 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 9,601 கனஅடியாக சரிந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு விநாடிக்கு 1,000 கனஅடி, கால்வாய் பாசனத்துக்கு 300 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவைக் காட்டிலும், நீர் வரத்து அதிகமாக உள்ளதால் அணை நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அணையின் நீர்மட்டம் நேற்று 115.78 அடியாகவும், நீர் இருப்பு 86.88 டிஎம்சியாகவும் இருந்தது.