விவசாயம், கால்நடை வளங்கள். காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் பொதுமக்கள் தொடர்பாடல் தினமாக ஒவ்வொரு மாதமும் முதலாவது திங்கட்கிழமை விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் வளாகத்தில் முற்பகல் 9.00 மணி தொடக்கம் 4.00 மணி வரை நடாத்தப்படும்.
அதற்கமைய, விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் திரு. கே.டீ.லால்காந்த அவர்கள், விவசாயம், கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் சுருணாரத்ன அவர்கள், காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் மருத்துவ கலாநிதி கசில் ரணசிங்க அவர்கள் மற்றும் விவசாயம், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சின் செயலாளர் டீ.பீ.விக்கிரமசிங்க அவர்கள் உள்ளிட்ட விவசாயம், கால்நடை வளங்கள். காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சுக்குரிய அனைத்து நிறுவனங்கள், திணைக்களங்களின் தலைவர்களின் பங்கேற்புடன் குறித்த பொதுமக்கள் தொடர்பாடல் தினம் நடாத்தப்படும்.
அதில், குறித்த அமைச்சால் இதுவரை தீர்க்கப்படாத பிரச்சினைகளுக்குப் பொறுப்புக்கூற வேண்டிய அதிகாரிகளுக்கு சமர்ப்பிப்பதற்கும் வாய்ப்புக் கிடைப்பதுடன், பொருத்தமான அச்சந்தர்ப்பத்திலேயே வழங்குவதும அமைச்சின் முன்னுரிமையாக அமையும் என அமைச்சு அறிவித்துள்ளது