தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்கள், கடந்த ஜூலை மாதத்தில் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய நிலையில், அதிருப்தி வாடிக்கையாளர்கள் பலர் மலிவான திட்டங்கள் கொடுக்கும் அரசுத்துறை தொலைத் தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு மாறத் தொடங்கினர். BSNL நிறுவனமும், கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொண்டு, நிறுவனத்தை மேம்படுத்தும் வகையில், பல மலிவான ரீசார்ஜ் திட்டங்களை அவ்வப்போது அறிவித்து வாடிக்கையாளர்களை கவர முயற்சித்து வருகிறது. பிஎஸ்என்எல் திட்டங்கள் மற்ற தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களை விட அதிக நன்மைகளை கொடுக்கக் கூடியவை என்பதால் வாடிக்கையாளர் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.
பிஎஸ்என்எல் தனது கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு ஏராளமான ரீசார்ஜ் திட்டங்களைக் கொண்டுள்ள நிலையில், 100 ரூபாய்க்கும் குறைவாக உள்ள மலிவான திட்டங்களைப் பற்றி அறிந்து கொள்ளலாம். இதில் கூட வாடிக்கையாளர்கள் அழைப்பு மற்றும் டேட்டா போன்ற பலன்கள் கிடைக்கின்றன. குறைந்த கட்டணத்தில் தங்கள் சிம்மை ஆக்டிவ் ஆக வைத்திருக்க விரும்பும் பயனர்களுக்கு நிறுவனத்தின் இந்தத் திட்டங்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
BSNL வழங்கும் 5 மலிவான ரீசார்ஜ் திட்டங்கள்
பிஎஸ்என்எல் ரூ.58 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.58 Plan)
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.58 கட்டணத்திலான திட்டத்தை வழங்குகிறது. இதில், பயனர்களுக்கு 7 நாட்கள் வேலிடிட்டி மற்றும் தினசரி 2ஜிபி வரை அதிவேக டேட்டா கிடைக்கும். இதில் அழைப்பு வசதி கிடைக்காது.
பிஎஸ்என்எல் ரூ.87 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.87 Plan)
பிஎஸ்என்எல் (BSNL) வழங்கும் ரூ.87 திட்டத்தில் தினமும் 1ஜிபி டேட்டா கிடைக்கும். இதன் வேலிடிட்டி 14 நாட்கள். இந்த திட்டத்தில், நிறுவனம் வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற இலவச அழைப்புகளை வழங்குகிறது. பல பயனர்களுக்கு இது சிறந்த பட்ஜெட் திட்டமாக இருக்கும்.
பிஎஸ்என்எல் ரூ.94 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.94 Plan)
பிஎஸ்என்எல் போர்ட்ஃபோலியோவில் ரூ.94 திட்டம் கிடைக்கிறது. இதில் மொத்தம் 3 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. திட்டத்தின் வேலிடிட்டி 30 நாட்களாக இருக்கும். இதில், அழைப்புக்கு 200 நிமிடங்கள் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.97 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.97 Plan)
பிஎஸ்என்எல் தனது வாடிக்கையாளர்களுக்கு ரூ.97 திட்டத்தையும் வழங்குகிறது. இந்த திட்டத்தில் தினசரி 2ஜிபி டேட்டா கிடைக்கும். இந்த திட்டத்தில் அனைத்து நெட்வொர்க்குகளுக்கும் வரம்பற்ற இலவச குரல் அழைப்பு வசதியும் வழங்கப்படுகிறது.
பிஎஸ்என்எல் ரூ.98 ரீசார்ஜ் திட்டம் (BSNL Rs.98 Plan)
பிஎஸ்என்எல் நிறுவனம் வாடிக்கையாளர்களுக்காக கொண்டுவந்துள்ள ரூ.98 கட்டணம் கொண்ட ப்ரீபெய்ட் திட்டத்தில், பயனர்களுக்கு 18 நாட்கள் வேலிடிட்டி வழங்கப்படுகிறது. திட்டத்தில் மொத்தம் 36ஜிபி அதிவேக டேட்டாவைப் பெறுவீர்கள். அதாவது தினமும் 2ஜிபி வரை மட்டுமே அதிவேக டேட்டாவைப் பயன்படுத்த முடியும்.