Redmi Note 14 சீரிஸ் நாளை அறிமுகம்… சிறப்பு அம்சங்கள் குறித்து லீக் ஆன சில தகவல்கள்

Xiaomi Redmi Note 14: ஸ்மார்ட்போன் என்பது தொலைதொடர்பு சாதனம் என்ற நிலை மாறி, காலை விழித்தது முதல் இரவு படுக்கும் வரை தேவைப்படும் அத்தியாவசிய பொருளாக மாறி விட்டது. சுருக்கமாக கூற வேண்டும் என்றால், இன்றைய டிஜிட்டல் உலகில், நமது வாழ்க்கையை ஸ்மார்ட்போன்கள் தான் இயக்குகின்றன. வாடிக்கையாளர்களை கவர, ஸ்மார்ட்போன் தயாரிப்[பு நிறுவனங்களும் தினம் தினம் புதுப்புது போன்களை அறிமுகம் செய்து வருகின்றன. 

அந்த வகையில், இந்தியாவில் Xiaomiயின் புதிய ஸ்மார்ட்போன் தொடருக்கான காத்திருப்பு முடிவுக்கு வரவுள்ளது. Xiaomi Redmi Note 14 தொடர் நாளை இந்தியாவில் அறிமுகப்படுத்தப்படும். Redmi Note 14, Redmi Note 14 Pro மற்றும் Redmi Note 14 Plus ஆகிய மூன்று ஸ்மார்ட்போன்கள் நாளை அறிமுகப்படுத்தப்பட உள்ளன. Redmi Note 14 தொடர் அறிமுகம் Realme மற்றும் Aiku போன்ற நிறுவனங்களுக்கு போட்டியை அதிகரிக்கும்.  மிட் ரேன்ஞ் வகை ஸ்மார்ட்போனான இதில் காணப்படும் சிறப்பு அம்சங்களை அறிந்து கொள்ளலாம்.

Redmi Note 14 போனில் எதிர்பார்க்கப்படும் அம்சங்கள்

Redmi Note 14 

Redmi Note 14 போனில் 6.67 இன்ச் AMOLED டிஸ்ப்ளே கொண்டதாக இருக்கலாம். இதில் MediaTek Dimension 7025 Ultra chipset இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதில் 50MP+2MP இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது தவிர, செல்ஃபிக்காக 16எம்பி முன்பக்க கேமரா வழங்கப்படலாம். பவர் பேக்கப்பிற்கு, 45W ஃபாஸ்ட் சார்ஜிங்குடன் 5110mAh பேட்டரியைப் பெறுவதற்கான வாய்ப்பு உள்ளது.

Redmi Note 14 Pro

Redmi Note 14 Pro ஆனது 120Hz புதுப்பிப்பு வீதத்துடன் 6.67-இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே கொண்டிருக்கலாம். இதில் MediaTek Dimension 7300 Ultra chipset பொருதப்பட்டிருக்கலாம். 50MP + 8MP + 2MP மூன்று பின்புற கேமரா அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் அறிமுகப்படுத்தப்படலாம். செல்ஃபிகள் மற்றும் வீடியோ அழைப்புகளுக்கான 50MP முன்பக்க கேமரா மற்றும் 45W ஃபாஸ்ட் சார்ஜிங் கொண்ட 5500mAh பேட்டரி போன்ற அம்சங்கள் வழங்கப்படலாம்.

Redmi Note 14 Pro+

Redmi Note 14 Pro Plusக்கு 6.67 இன்ச் 1.5K AMOLED டிஸ்ப்ளே வழங்கப்படலாம். இந்த போனில் Qualcomm Snapdragon 7s Gen 3 சிப்செட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தத் தொடரின் மிகவும் சக்திவாய்ந்த கேமிராவை, இந்த மாடல் கொண்டிருக்க கூடும் ஸ்மார்ட்போன் 50MP+12MP+50MP டிரிபிள் ரியர் கேமரா அமைப்புடன் வரலாம். செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 20எம்பி செல்ஃபி கேமராவைப் பெற வாய்ப்பு உள்ளது. 6200mAh பேட்டரிக்கு 90W வேகமான சார்ஜிங் ஆதரவு கிடைக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.