இந்தியாவில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிஸ் போன்கள் அறிமுகம்: விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்தியாவில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகமாகி உள்ளன. ரெட்மி நோட் 14 புரோ+ 5ஜி, ரெட்மி நோட் 14 புரோ 5ஜி மற்றும் ரெட்மி நோட் 14 5ஜி என மூன்று மாடல்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது. அது குறித்து பார்ப்போம்.

சீன எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமான சியோமிக்கு சொந்தமான துணை நிறுவனம் தான் ரெட்மி. கடந்த 2013 முதல் பட்ஜெட் விலையில் போன்களை விற்பனை செய்து வருகிறது இந்நிறுவனம். வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய போன்களை சந்தையில் அறிமுகம் செய்வதை ரெட்மி நிறுவனம் வழக்கமாகக் கொண்டுள்ளது.

அந்த வகையில் தற்போது இந்திய சந்தையில் ரெட்மி நோட் 14 5ஜி சீரிஸ் போன்கள் தற்போது அறிமுகமாகி உள்ளது. இந்த மூன்று போன்களும் ஆண்ட்ராய்டு 14 இயங்குதளத்தில் இயங்குகிறது. லைவ் டிரான்ஸ்லேட், சர்க்கிள் டு சேர்ச் உள்ளிட்ட ஜெனரேட்டிவ் ஏஐ அம்சங்களையும் கொண்டுள்ளது. சிறப்பு அம்சங்கள்:

  • மூன்று போன்களும் 6.67 இன்ச் டிஸ்பிளே உடன் வெளிவந்துள்ளது
  • ஸ்னாப்டிராகன் 7எஸ் ஜென் 3 ப்ராசஸரில் இயங்குகிறது ரெட்மி நோட் 14 புரோ+
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7300 அல்ட்ரா ப்ராசஸரை கொண்டுள்ளது ரெட்மி நோட் 14 புரோ
  • மீடியாடெக் டிமான்சிட்டி 7025 அல்ட்ரா ப்ராசஸரை கொண்டுள்ளது ரெட்மி நோட் 14
  • மூன்று போன்களிலும் 50 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா. மூன்று மாடல்களிலும் பின்பக்கம் மூன்று கேமராக்கள் இடம்பெற்றுள்ளன
  • புரோ மாடல்களில் 20 மெகாபிக்சலும், பேஸ் மாடலில் 16 மெகாபிக்சலும் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
  • புரோ + மாடலில் 6200mAh பேட்டரியும், புரோ மாடலில் 5500mAh பேட்டரியம், நோட் 14ல் 5110mAh பேட்டரியும் இடம்பெற்றுள்ளது
  • இந்த போன்களுடன் சார்ஜர் வழங்கப்படுகிறது
  • விலையை பொறுத்தவரையில் புரோ + ரூ.29,999க்கும், புரோ மாடல் ரூ.23,999க்கும், நோட் 14 ரூ.17,999 என விலையிலும் விற்பனை தொடங்குகிறது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.