புதுடெல்லி,
மொத்தம் 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டசபையின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு பிப்ரவரியில் முடிவடைகிறது. இதையொட்டி தேர்தல் அறிவிப்பு ஜனவரியில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி 20 வேட்பாளர்களை கொண்ட 2ம் கட்ட பட்டியலை இன்று வெளியிட்டுள்ளது. அதில் ஜங்புரா தொகுதியில் கட்சியின் மூத்த தலைவர் மணீஷ் சிசோடியா போட்டியிடுகிறார். மேலும் சமீபத்தில் ஆம் ஆத்மி கட்சியில் இணைந்த பிரபல யு.பி.எஸ்.சி ஆசிரியர் அவத் ஓஜா, பட்பர்கஞ்ச் தொகுதியில் களம் காண்கிறார். இந்த தொகுதியின் தற்போதைய எம்.எல்.ஏ. மணீஷ் சிசோடியா என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லி சட்டசபை சபாநாயகரும், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.வுமான ராம் நிவாஸ் கோயலுக்கு பதிலாக ஷண்டியை ஆம் ஆத்மி களம் இறக்கியுள்ளது. முன்னதாக, கடந்த மாதம் 21ம் தேதி 11 வேட்பாளர்களை கொண்ட முதற்கட்ட பட்டியலை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டது.