வடமத்திய மாகாணத்தில் TJC மாம்பழ வகையை ஏற்றுமதி சார்ந்த பயிராக மாற்ற திட்டமிட்டுள்ளதாக மாகாண விவசாய திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்த மாம்பழ வகை உற்பத்தியாளர்களை ஏற்றுமதி தொழில்முயற்சியாளர்களாக மாற்றுவது உடனடித் தேவை என திணைக்களத்தின் மேலதிக மாகாண விவசாயப் பணிப்பாளர் கலாநிதி புத்திக அபேசிங்க சுட்டிக்காட்டினார்.
அதன்படி விவசாயிகளுக்கு முறையான பயிற்சிகளை வழங்கி அதிக விளைச்சலைப் பெறுவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்படும் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.