ஸ்மார்ட்ஃபோன் பாக்ஸின் பயன்கள்: நாம் புதிய ஸ்மார்ட்போன் வாங்கும் போதெல்லாம், அது ஒரு பாக்ஸில் வைக்கப்பட்டு வருகிறது, அதில் தொலைபேசி மற்றும் அதனுடன் தொடர்புடைய பாகங்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த பாக்ஸில் USB கேபிள், சார்ஜர், கையேடு மற்றும் பிற பாகங்கள் இருக்கும். பல நேரங்களில் மொபைல் போன் வாங்கிய பின் அதன் பெட்டியை பலர் பாதுகாத்து வைப்பதில்லை. பலர் அதை குப்பை என்று கருதி பெட்டியை தூக்கி எறிந்து விடுகின்றனர்.ஆனால் அவ்வாறு செய்வது மிகப் பெரிய தவறு. அதற்கான சில காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
ஸ்மார்ட்போன் பாக்ஸ் பேக்கேஜிங்கிற்கு மட்டுமல்ல, பல முக்கியமான விஷயங்களுக்கு பயன்படும் என்பதோடு, உங்களிடம் போன் உள்ளவரை அது உங்களிடம் இருக்க வேண்டியது அவசியம். ஸ்மார்ட்போன் பெட்டியின் நன்மைகள் என்ன, அது உங்களுக்கு ஏன் முக்கியமானது என்பதை அறிந்து கொள்ளலாம். நீங்களும் பயனற்றது எனக் கருதி தூக்கி எறிபவர் என்றால், மீண்டும் சிந்தியுங்கள். காலி ஸ்மார்ட்போன் பெட்டி மிகவும் பயனுள்ளதாக இருக்கும்
1. செல்போனின் மறுவிற்பனை மதிப்பை அதிகரிக்க உதவியாக இருக்கும்
எதிர்காலத்தில் உங்கள் மொபைலை விற்க விரும்பினால், பெட்டியும் அதன் பாகங்களும் உங்கள் சாதனத்தின் மதிப்பை அதிகரிக்கலாம். ஒரு பெட்டியுடன் கூடிய ஃபோன் அதிக பிரீமியமாகக் கருதப்படுகிறது. வாங்குவோரும் அதனை நன்றாக மதிப்பிடுவார்கள். இது உங்கள் தொலைபேசியின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும்.
2. தொலைபேசியை பாதுகாப்பாக வைப்பதற்கான சிறந்த பெட்டியாக இருக்கும்
உங்கள் ஃபோனையும் அதன் உபகரணங்களையும் பாதுகாப்பாக வைத்திருக்க ஸ்மார்ட்போன் பெட்டி மிகவும் உதவும். நீங்கள் உங்கள் தொலைபேசியைப் பயன்படுத்தாதபோது, அதை பெட்டியில் வைக்கலாம். இது தூசி, கீறல்கள் மற்றும் பிற சேதங்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது.
3. பாகங்கள் ஒழுங்காக வைத்துக்கொள்ளவது எளிது
சார்ஜர்கள், கேபிள்கள், இயர்போன்கள் போன்ற ஃபோனுடன் வரும் பாகங்கள் அடிக்கடி தொலைந்து போகும். எனவே, நீங்கள் அவற்றை தொலைபேசி பெட்டியில் பாதுகாப்பாக வைக்கலாம். இந்த பெட்டியில் ஃபோன் பில் கூட வைக்கலாம். இதனால் தேவைப்படும்போது எளிதாகக் கண்டுபிடிக்கலாம்.
4. சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பங்களிப்பு
எந்த பொருளையும் தூக்கி எறிவதற்கு பதிலாக அதை மீண்டும் பயன்படுத்துவது புத்திசாலித்தனமான செயல் என்பதோடு, சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நடவடிக்கையாகும். போன் தயாரிப்ப நிறுவனங்கள் சுற்று சூழல் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முற்றிலும் மறுசுழற்சி செய்யக்கூடிய அத்தகைய பெட்டிகளைத் தயாரிக்கின்றன. அவற்றை முறையாகப் பயன்படுத்துவதன் மூலம், சுற்றுச்சூழல் பாதுகாப்பில் உங்கள் பங்கை ஆற்றலாம்.
5. சிறந்த பேக்கேஜிங்
நீங்கள் ஸ்மார்ட்போனை யாரேனும் ஒருவருக்கு உதவும் வகையில், கொடுக்க விரும்பினால், அதை ஒரு பெட்டியுடன் கொடுப்பது மிகவும் சிறந்ததாக இருக்கும். பெட்டியில் நேர்த்தியான பேக்கேஜிங்குடன் வழங்குவது இன்னும் சிறப்பு.