One Year Validity Recharge Plans: ரீசார்ஜ் செய்வது என்பது முன்பை விட தற்போது எளிமையாகிவிட்டது. டாக்டைம், டேட்டா, மெசேஜ் ரேட் கட்டர் போன்ற தனித்தனி ரீசார்ஜ் திட்டங்களை நீங்கள் கடைகளுக்குச் சென்று பெற்றுக்கொள்ள வேண்டும். ரீசார்ஜ் கார்டுகளும் அப்போது விற்பனை செய்யப்பட்டு வந்தன. ஆனால், அந்த காட்சிகள் டேட்டாவின் ஆதிக்கம் அதாவது ஜியோ தொலைத்தொடர்பு சந்தைக்குள் நுழைந்ததும் முழுவதுமாக மாறிவிட்டது.
டாக்டைம் இப்போது இலவசமாகவிட்டது, அதாவது வரம்பற்ற வகையில் நாடு முழுவதும் நீங்கள் பேசிக்கொள்ளலாம். மெசேஜ்களும் 100 எஸ்எம்எஸ் தினமும் இலவசமாக கிடைக்கிறது. ரீசார்ஜ் திட்டங்கள் அனைத்தும் தற்போது டேட்டா சார்ந்து மாறிவிட்டது. நீங்கள் தினமும் பயன்படுத்தும் டேட்டாக்களை பொறுத்த கட்டணங்கள் மாறுபடுகிறது. அதுவும் தற்போது 5ஜி வரை டேட்டா வந்துவிட்டது. அதுவும் வரம்பற்ற வகையில் வழங்கப்படுகிறது. இப்போது செயலிகளில் டிஜிட்டல் முறையிலேயே கட்டணம் செலுத்தப்படுகிறது.
ரீசார்ஜ் கட்டணங்கள் அதன் சேவையை போலவே உயர்ந்துவிட்டன. அளவற்ற வகையில், அதிவிரைவான டேட்டா சேவைகள் கிடைப்பதால் கட்டணங்கள் உயர்ந்துவிட்டதையும் வாடிக்கையாளர்கள் புரிந்துகொள்கின்றனர். ஆனால் அவர்களால் அடிக்கடி அதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என்பதே சிரமமாக இருக்கிறது. அந்த வகையில், அனைத்து நிறுவனங்களும் ஓராண்டுகளுக்கான ரீசார்ஜ் திட்டங்களை வைத்திருக்கிறது. இதனால், நீங்கள் ஒருமுறை ரீசார்ஜ் செய்தாலே ஓராண்டுக்கான பலன்கள் கிடைக்கும். நீங்கள் அடிக்கடி ரீசார்ஜ் செய்யவும் வேண்டாம்.
அப்படியிருக்க ஜியோ, ஏர்டெல், வோடபோன் ஐடியா, பிஎஸ்என்எல் நிறுவனங்களில் சிறந்த ரீசார்ஜ் திட்டங்களை இங்கு காணலாம். அதில் கிடைக்கும் நன்மைகள், பலன்களை இங்கு விரிவாக காணலாம்.
ஏர்டெல்
ஏர்டெல் நிறுவனம் 365 நாள்கள் வேலிடிட்டி கொண்ட ரீசார்ஜ் திட்டங்களை 1999 ரூபாயில் வழங்குகிறது. இதில் வரம்பற்ற மொபைல் காலிங், தினமும் 100 எஸ்எம்எஸ் சேவைகள் கிடைக்கும். இதில் மொத்தம் 24 ஜிபி டேட்டா கிடைக்கும். அது தீர்ந்துவிட்டால் 1 MB டேட்டா 50 பைசாவுக்கு கிடைக்கும். நீங்கள் டேட்டா Add-on ரீசார்ஜ் திட்டங்களை வைத்துக்கொள்ளலாம்.
வோடபோன் ஐடியா
வோடபோன் ஐடியா நிறுவனமும் ரூ.1999 ரீசார்ஜ் திட்டத்திற்கு 365 நாள்கள் வேலிடிட்டி உடன் வழங்குகிறது. இதில் தினமும் 100 எஸ்எம்எஸ் கிடைக்கும், வரம்பற்ற மொபைல் காலிங் உள்ளது. மேலும் 24 GB டேட்டா கிடைக்கும்.
பிஎஸ்என்எல்
2999 ரூபாயில் 365 நாள்களுக்கான ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் வழங்குகிறது. இதில் உங்களுக்கு தினமும் 3ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் 100 எஸ்எம்எஸ் மற்றும் வரம்பற்ற மொபைல் காலிங் வசதியும் உண்டு.
ஜியோ
ஜியோவில் ஓராண்டு காலத்திற்கு இரண்டு ரீசார்ஜ் திட்டங்கள் உள்ளன. அதாவது, முதல் ரீசார்ஜ் திட்டம் 336 நாள்கள் வேலிடிட்டியுடன் வருகிறது. இதன் கட்டணம் 895 ரூபாய் மட்டுமே. இதில் மொத்தமாக 24 ஜிபி டேட்டா கிடைக்கும். வரம்பற்ற மொபைல் காலிங் வசதி. ஒவ்வொரு 28 நாள்களுக்கும் 50 எஸ்எம்எஸ் இலவசமாக கிடைக்கும். ஜியோ செயலிகளின் இலவச அணுகலும் உண்டு.
மறுபுறம் 365 நாள்கள் வேலிடிட்டி உடன் வரும் ரீசார்ஜ் திட்டத்தின் கட்டணம் ரூ.3,599 ஆகும். இதில் உங்களுக்கு தினமும் 2.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதுவும் 100 எஸ்எம்எஸ் தினமும் இலவசமாக கிடைக்கும். வரம்பற்ற மொபைல் காலிங் வசதியும் கிடைக்கும்.