இந்திய இளைஞர்களை சர்வதேச எல்லைகள் வழியாக சட்டவிரோதமாக கடத்தியதற்காகவும், போலி கால் சென்டர்கள் மூலம் பண மோசடி செய்ததற்காகவும் தேசிய புலனாய்வு முகமை என்ஐஏவால் தேடப்படும் ஹைதராபாத்தை சேர்ந்த ஒருவரை டெல்லி காவல்துறை சிறப்புப் பிரிவு கைது செய்துள்ளது. குற்றவாளியை பிடிக்க பல மாதங்களாக பல மாநிலங்கள் வழியாக அவரை துரத்திச் சென்ற காவல் துறையினர் 2500 கி.மீ. இடைவிடாத தேடலுக்கு பின் ஹைதராபாத்தில் அவனை கைது செய்தது. காவல்துறையினர் தன்னை நெருங்குவதை தெரிந்து இடத்தை மாற்றிக்கொண்டே […]
