இசையமைப்பாளர் இளையராஜா கர்நாடக இசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியனின் ராகத்தைப் பாராட்டி இருக்கிறார்.
கர்நாடக சங்கீத இசைக் கலைஞரான சஞ்சய் சுப்ரமணியம் கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னையில் ‘தமிழும் நானும்’ என்கிற பெயரில் இசை நிகழ்ச்சியை நடத்தியிருந்தார். இதில், பக்திப் பாடல்கள் பாடப்பட்டிருக்கின்றன. அந்த நிகழ்ச்சியில் இறுதியாக, விடுதலை 2 படத்தில் இடம்பெற்ற இளையராஜாவின் ‘தெனந்தெனமும் உன் நினைப்பு’ மற்றும் ‘மனசுல ஒரு மாதிரி’ ஆகிய பாடலை புஷ்பலதிகா ராகத்துடன் சஞ்சய் சுப்ரமணியன் பாடி இருக்கிறார்.
இதைக்கேட்ட ரசிகர்கள் பலரும் அவரைப் பாராட்டி இருந்தனர். நிகழ்வு முடிந்தபின் சஞ்சய் சுப்ரமணியன் தன் எக்ஸ் பக்கத்தில், “புஷ்பலதிகா – நெனப்பு, ஒரு மாதிரி!” என தான் பாடிய வீடியோவை எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது அந்த வீடியோவை இளையராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “உங்க புஷ்பலதிகா – நெனப்பு, வேற மாதிரி !வாழ்த்துக்கள்” எனப் சஞ்சய் சுப்ரமணியனைப் பாராட்டி இருக்கிறார். விடுதலை 2 படத்தில் ‘மனசுல ஒரு மாதிரி’ பாடலை சஞ்சய் சுப்ரமணியன் பாடியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/KzgH8aPb2MI9PVttY53JpX
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…