உத்தர பிரதேசம்: வாகனங்கள் நேருக்கு நேர் மோதல் – 3 குழந்தைகள் உள்பட 6 பேர் பலி

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள ஜெய்த்பூர் கிராமம் அருகே சாலையில் சென்று கொண்டிருந்த மினிலாரி மற்றும் வேன் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 6 பேர் உயிரிழந்தனர்.

மேலும் படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடல்களை அடையாளம் காணும் பணி முடிவடைந்த பிறகு அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.