கடவுளே அஜித்தே என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்துள்ளது என்று நடிகர் அஜித் தெரிவித்துள்ளார். அஜித், அஜித்குமார், ஏ.கே. என்று மட்டுமே தன்னை அழைக்கவேண்டும் என்று ஏற்கனவே அவர் அறிவித்துள்ள நிலையில் அவரது ரசிகர்கள் தற்போது அவரை ‘கடவுளே…. அஜித்தே’ என்ற கோஷத்துடன் விளித்துவருகின்றனர். இது தனக்கு வேதனையளிப்பதாக அவர் இன்று வெளியிட்டிருக்கும் குறிப்பிட்டுள்ளார், இது குறித்து அந்த அறிக்கையில் அவர் கூறியுள்ளதாவது : “சமீபமாக முக்கியமான நிகழ்வுகளில், பொதுவெளியில், அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் ‘க…. அஜித்தே […]