2024 கல்விப் பொதுத் தரா தரப் பத்திர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பம் கோரல் இன்றுடன் (10) முடிவடைவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கையில், இன்று (10) நள்ளிரவு 12 மணியுடன் விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் செயற்பாடு முடிவடையும். நிகழ்நிலை ஊடாக பரீட்சைக்கான விண்ணாப்பத்திற்காக கடந்த நவம்பர் 5ஆம் திகதியில் இருந்து 30 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்கப்பட்டிருந்ததாகக் குறிப்பிட்டார்.