ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சுகாதார மற்றும் ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளராக விஷேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவை நியமித்துள்ளார்.
அதற்கமைவான நியமனக் கடிதம் ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி சனத் நந்திக குமாநாயக்கவினால் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்கவிற்கு இன்று (10) ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2024. 12. 10