புதுடெல்லி,
வங்கக்கடலில் உருவான பெஞ்சல் புயல் காரணமாக பெய்த தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்தது. குறிப்பாக, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது.இதனால் மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதோடு பெரும் சேதத்தையும் உண்டாக்கியது.
இந்த நிலையில் , பெங்கல்புயல் பாதிப்புகளை கண்டறிந்து உதவிகள் அளிப்பதற்காக தமிழ்நாடு பாஜக சார்பில் அமைக்கப்பட்ட குழுவினர், மத்திய இணை மந்திரி எல்.முருகன் தலைமையில் மத்திய மீன்வளத்துறை மந்திரி ராஜீவ் ரஞ்சன் சிங்கை சந்தித்து மனு அளித்தனர். அப்போது பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான பேரிடர் நிவாரண உதவிகள் வேண்டி கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.