ரோஹித் சர்மா மட்டுமில்லை… ஓய்வுபெறும் இந்த 3 வீரர்கள் – இந்திய அணிக்கு கஷ்ட காலம்!

Indian National Cricket Team: இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் (India vs Australia) கடந்த 1996ஆம் ஆண்டு முதல் பார்டர் – கவாஸ்கர் கோப்பை (Border Gavaskar Trophy) என்ற பெயரில் ஆண்டுதோறும் டெஸ்ட் தொடரை விளையாடி வருகின்றன. பெரும்பாலும் ஒவ்வொரு ஆண்டுகளும் இந்த டெஸ்ட் தொடர் நடைபெறும். ஒரு வருடம் இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெறுகிறது என்றால் அடுத்தாண்டு இந்தியாவில் நடைபெறும்.

இதுவரை சுமார் 16 பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர்கள் நடைபெற்றுள்ளன. அதில் 10 தொடர்களை இந்திய அணி வென்றுள்ளது. அதில் இரண்டு முறை (2018-19, 2020-21) ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி (Team India) தொடரை வென்றுள்ளது. ஆஸ்திரேலிய அணி (Team Australia) 5 முறை தொடரை வென்றுள்ளது, அதில் ஒருமுறை மட்டுமே (2004-05) இந்திய மண்ணில் வென்றுள்ளது.

அழுத்தத்தில் ரோஹித் சர்மா

2003-04ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய மண்ணில் நடைபெற்ற தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவானது. இதனால், 2002-03 தொடரை வென்றிருந்த இந்திய அணியே அந்த முறையும் கோப்பையை தக்கவைத்திருக்கிறது. இந்த ஒருமுறை மட்டுமே தொடர் டிராவாகி இருக்கிறது. அந்த வகையில், 2024-25ஆம் ஆண்டுக்கான பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்த முறை 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரண்டு போட்டிகள் நிறைவடைந்துள்ளன.

மூன்று போட்டிகள் பாக்கி உள்ள நிலையில், 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. தொடரை வென்று ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு தகுதிபெறப்போவது யார் என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. மேலும், அடிலெய்டில் நடந்த 2ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது, கேப்டன் ரோஹித் சர்மா (Rohit Sharma) மீது மிகுந்த அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அவரது கேப்டன்ஸி மட்டுமின்றி பேட்டிங் பார்ம் குறித்தும் பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

It is time to look ahead.

Preparations for the Brisbane Test starts right here in Adelaide.#TeamIndia #AUSvIND pic.twitter.com/VfWphBK6pe

— BCCI (@BCCI) December 10, 2024

ஒரே ஒரு தோல்வி வந்துவிட்டால்…

இந்திய அணி கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெஸ்டில் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டத்தை வெல்லவில்லை. மேலும் தற்போது 11 ஆண்டுகளுக்கு பின் சொந்த மண்ணிலேயே மிக மோசமான முறையில் 0-3 டெஸ்ட் தொடரை இழந்துள்ள இந்திய அணிக்கு ஆஸ்திரேலிய தொடர் முக்கியமானதாக உள்ளது. இன்னும் போட்டியில் தோற்றால் கூட ஆஸ்திரேலியா WTC பைனலுக்குச் (ICC World Championship Final 2025) செல்லும் வாய்ப்பு பிரகாசமாகிவிடும்.

ஒருவேளை, அடுத்த போட்டியில் இந்திய அணி தோல்வியடையும்பட்சத்தில், ரோஹித் சர்மா இந்த தொடரின் இடையிலேயே சர்வதேச டெஸ்ட் அரங்கில் இருந்து ஓய்வு பெறவும் வாய்ப்பிருப்பதாக தெரிகிறது. ஏனென்றால் ஒருவேளை இந்திய அணி WTC பைனலுக்கு தகுதிபெறாதபட்சத்தில், நிச்சயம் அடுத்தாண்டு ஜூன் மாதம்தான் போட்டி இருக்கிறது. 

ஓய்வுபெறும் 3 வீரர்கள்?

எனவே, இந்த WTC சுழற்சியுடன் ரோஹித் சர்மா டெஸ்டில் இருந்து ஓய்வு பெறலாம் (Retirement) என கூறப்படுகிறது. இதில் ரோஹித் சர்மா மட்டுமின்றி, விராட் கோலி (Virat Kohli), ரவிசந்திரன் அஸ்வின் (Ravichandran Ashwin), ரவீந்திர ஜடேஜா (Ravichandran Ashwin) ஆகியோரும் இந்த WTC சுழற்சியோடு தங்களது ஓய்வை அறிவிக்க வாய்ப்புள்ளது. விராட் கோலி இடத்திற்கு கடுமையான போட்டி நிலவும். மாறாக ரவிசந்திரன் அஸ்வின் இடத்திற்கு வாஷிங்டன் சுந்தர் (Washington Sundar) மற்றும் ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) இடத்திற்கு அக்சர் பட்டேல் ஆகியோர் இப்போதே தயாராக இருக்கிறார்கள் என்பது நாம் கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.