சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப் பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது.
கேள்வி நேரத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதில் அளித்து வருகின்றனர். அந்தவகையில் அதானி விவகாரம் தொடர்பாக சட்ட பேரவையில் கேள்வி எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “அதானி விவகாரம்
குறித்து நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்த வேண்டும், நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டுமென ‘இந்தியா’ கூட்டணி வலுயுறுத்துகிறது. திமுகவை குறை சொல்லும் பாஜக, பாமக இந்த கோரிக்கையை ஆதரிக்க தயாராக இருக்கிறதா? இப்போதும் சொல்கிறோம், அதானி விவகாரத்துக்கும் தமிழ்நாட்டுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. என்னை வந்து அவர் சந்திக்கவும் இல்லை.
நானும் அவரைப் பார்க்கவில்லை. இதைவிட வேறு விளக்கம் வேண்டுமா? நான் கேட்கிற கேள்வி, அதானி விவகாரம் குறித்து பாஜக ஆட்சியைப் பார்த்து நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறார்களே இது குறித்து பேச தயாராக இருக்கிறீர்களா? என்பதுதான் என் கேள்வி” என்று ஸ்டாலின் பேசியிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…