அஸ்வசும நலன்புரி நன்மைகள் சபையினூடாக, பயனாளர்களின் டிசம்பர் மாதத்துக்கான உதவித்தொகையை நாளை அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அதன்படி, 11,024,310,500.00 (பதினொரு பில்லியன் இருபத்தி நான்கு மில்லியன் முந்நூற்று பத்தாயிரத்து ஐந்நூறு) ரூபாய் தொகை 1,707,311 (பதினேழு இலட்சத்து ஏழாயிரத்து முந்நூற்று பதினொரு) அஸ்வசும பயனாளர்களின் குடும்பங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும்.
மேலும், அனைத்து பயனாளர்களும் தங்களுக்குரிய அஸ்வசும உதவித் தொகையை டிசம்பர் 13ஆம் திகதி முதல் அவர்களின் வங்கிக் கணக்குகளில் இருந்து எடுத்துக்கொள்ளலாம் என்றும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.