கம்பஹா மாவட்ட செயலாளர் லலிந்த கமகே தலைமையில் சமீபத்தில் மாவட்ட செயலகத்தில் ஏற்றுமதி நோக்கில் அலங்கார மீன் வளர்ப்பு குறித்த பயிற்சி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது.
கம்பஹா மாவட்டத்தில் அலங்கார மீன் வளர்ப்பில் ஈடுபட்டுள்ள தொழில்முனைவோரை இலக்காகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் 60 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
தேசிய பொருளாதாரத்திற்கு உற்பத்தித் திறன் மிக்க தொழில் முனைவோரை உருவாக்குவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு, ஏற்றுமதி சந்தைக்குத் தேவையான தொழில்நுட்ப அறிவு மற்றும் மீன் வளர்ப்பிற்கு தேவையான கோட்பாட்டு அறிவு ஆகியவை இங்கு பயிற்சியாளர்களுக்கு வழங்கப்பட்டன.
இதற்கு நிபுணத்துவம் வாய்ந்த அலங்கார மீன் வளர்ப்பு ஆலோசகர் உதயகாந்த விக்கிரமசிங்க அவர்கள் மூலம் அனுசரனை வழங்கப்பட்டது.
மனிதவலு மற்றும் வேலை வாய்ப்புத் திணைக்களம், கம்பஹா மாவட்ட செயலகத்தின் நீர்வாழ் உயிரின வளர்ப்புப் பிரிவும் இணைந்து இந்த நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளன.