சுகாதார சேவையின் மற்றும் வெகுஜன ஊடகத்துறையின் ஆகியவற்றின் மீது மக்கள் மத்தியில் நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்காக செயற்படுவதானது மிகவும் முக்கியமான விடயம் என சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்களின் புதிய செயலாளர் பதவிக்கான கடமைகளை ஆரம்பித்த விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க வலியுறுத்தினார்.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸவின் பங்குபற்றலுடன் இன்று (11) சுகாதார அமைச்சில் தனது பணிகளை ஆரம்பிக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் புதிய செயலாளர் இதனை தெரிவித்தார்.
கடந்த ஐந்து வருடங்களுக்குப் பிறகு சுகாதார அமைச்சுக்கு மீண்டும் வருவதற்கு கிடைத்தமை தொடர்பாக தான் சந்தோசம் அடைவதாகவும், நம்பிக்கை என்பது சில நபர்களிடம் காணப்படும் சிலரிடம் காணப்படாத மிகவும் கடினமானது என அவர் சுட்டிக்காட்டினார்.
அந்த நம்பிக்கையை வெற்றி கொண்டு பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டுள்ள மக்களுக்கு சாதாரண மனிதாபிமானத்துடன் கூடிய சேவையை நாட்டில் வழங்குவதற்கு தற்போதைய சுகாதார வெகுஜன ஊடக அமைச்சரின் வழிகாட்டல், முயற்சி மற்றும் குறிக்கோள் என்பவற்றிற்கு இணங்க வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
சுகாதார அமைச்சின் சிரேஷ்ட, அனுபவம் மிக்க அதிகாரிகளுடன் மக்கள் எதிர்பார்க்கும் மாற்றத்தை ஏற்படுத்தி, தீர்மானம் மிக்க நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை மேற்கொள்வதற்கான வேலை திட்டத்தில் பங்கு பெறும் வாய்ப்பு என் அனைவருக்கும் கிடைப்பதாகவும் சுகாதாரம் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் புதிய செயலாளர் விசேட வைத்தியர் அனில் ஜாசிங்க மேலும் விபரித்தார்.