இம்பால் மத்திய அர்சின் சட்டத்தை எதிர்த்து மணிப்பூரில் கண்டன பேரணி நடந்துள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் உள்ள இம்பால் பள்ளத்தாக்கில் வசிக்கும் மைத்தேயி, பழங்குடியினர்களான குகி மக்களுக்கும் இடையே இனக்கலவரம் ஏற்பட்டதில் 250க்கும் அதிகமான மக்கள் உயிரிழந்து ஆயிரக்கணக்கானோர் வீடுகளை இழந்தனர் வன்முறை சற்று ஓய்ந்திருந்த நிலையில் கடந்த மாதம் ஜிரிபாம் மாவட்டத்தில் 3 பெண்கள் மற்றும் 3 சிறுவர்கள் கடத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, மீண்டும் பெரிய அளவில் வன்முறை வெடித்தது. […]