குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை வலுவூட்டும் வேலைத்திட்டத்தின் பிரகாரம், குறைந்த வருமானம் பெறும் குடும்பம் ஒன்றிற்கு அவர்களின் வாழ்வாதாரத்தை வலுவூட்டுவதற்கான பொருட்கள் விநியோகம் அண்மையில் (06) மகாவிளச்சி பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.
இலக்கம் 367 தெமடமல்கம கிராம உத்தியோகத்தர் பிரிவைச் சேர்ந்த எஸ். திருமதி சுமங்கலா என்பவர் தெரிவு செய்யப்பட்டு அவரது சில்லறை வர்த்தகத்தை மேம்படுத்துவதற்கு தேவையான சில உபகரணங்கள் வழங்கப்பட்டதாக பதுளை மாவட்ட ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த நிகழ்வில், மகாவிளச்சி பிரதேச செயலாளர் மஞ்சரி சி. சந்திரதாச அவர்களின் பணிப்புரையின் பிரகாரம், உதவி திட்டமிடல் பணிப்பாளர் நாதுகல, மாவட்ட சமூர்த்தி உத்தியோகத்தர் திருமதி மனோரி ஹேவாமானகே உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் கலந்துகொண்டனர்.
தகவல் – சனத் கஹவத்த, மஹவிளச்சி ஊடக ஒருங்கிணைப்பு அதிகாரி
அனுராதபுரம் மாவட்ட ஊடகப் பிரிவு