Five 5G Smartphones Under 15K In Amazon: ஸ்மார்ட்போன் பயன்பாடு இந்தியாவில் அதிகமாகிவிட்டது. அதே நேரத்தில், 4ஜி தொழில்நுட்பம் மட்டுமின்றி 5ஜியும் பரவலாகிவிட்டது. ஜியோ மற்றும் ஏர்டெல் நாடு முழுவதும் அதிவேக 5ஜி இணையத்தை வாடிக்கையாளர்களுக்கு வரம்பற்ற வகையில் வழங்கி வருகின்றன. இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் 5ஜி சேவையின் மூலம் அதிவேகமாக இணையம் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது மருத்துவம், கல்வி உள்பட பல்வேறு உட்கட்டமைப்பு துறைகளிலும் சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறது.
இந்நிலையில், இந்தியாவில் 5ஜி ஸ்மார்ட்போனுக்கான டிமாண்டும் அதிகரித்துவிட்டது. இதனால் அனைத்து மொபைல் தயாரிப்பு நிறுவனங்களும் 5ஜி ஸ்மார்ட்போன் தயாரிப்பை அதிகரித்துவிட்டன. தற்போது அமேசான், பிளிப்கார்ட் ஆகியவை தள்ளுபடி விற்பனைகளை மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில், அமேசான் தள்ளுபடி விற்பனையில் ரூ.15 ஆயிரத்திற்குள் விற்பனையாகும் 5ஜி ஸ்மார்ட்போன்களை இங்கு காணலாம்.
iQOO Z9x 5G
இந்த ஸ்மார்ட்போன் 6ஜிபி RAM மற்றும் 128 இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் டிஸ்பிளே 6.72 இன்ச் ஆகும். இதில் ஸ்னாப்டிராகன் 6 Gen 1 SoC சிப்செட் பயன்படுத்தப்படுகிறது. இதன் பேட்டரி 6000mAh ஆகும். இது அமேசானில் தற்போது ரூ.13,999 ஆக விற்பனையாகிறது.
CMF by Nothing Phone 1
இந்த மொபைல் MediaTek Dimensity 7300.5 G பிராஸஸர் உடன் வருகிறது. இதன் ரெஃப்ரெஷ் ரேட் 120Hz ஆக உள்ளது. இதில் 50MP முன்பக்க கேமரா உள்ளது. 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இதன் விலை 14 ஆயிரத்து 796 ஆகும்.
Realme Narzo 70x 5G
இந்த மொபைல் MediaTek Dimensity 6100 SoC பிராஸஸர் உடன் வருகிறது. 5000mAh பேட்டரி உடன் வருகிறது. 45W பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் வருகிறது. 120Hz ரெப்ரேஷ் ரேட் டிஸ்பிளே உடன் வருகிறது. 8ஜிபி RAM, 128ஜிபி ஸ்டோரேஜ் உடன் வருகிறது. அமேசானில் 13 ஆயிரத்து 998 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.
Samsung Galaxy M15 5G
MediaTek Dimensity 6100+ பிராஸஸர், 50MP மூன்று பின்புற கேமராக்கள், 6000mAh பேட்டரி ஆகியவற்றுடன் வருகிறது. இதில் 6ஜிபி RAM, 128GB ஸ்டோரேஜ் 13 ஆயிரத்து 499 ரூபாய்க்கு வருகிறது.
Redmi 13 5G
இது Qualcomm Snapdragon 4 Gen 2 சிப்செட்டுடன் வருகிறது. இதில் 5030 mAh பேட்டரி உள்ளது. 6ஜிபி RAM மற்றும் 128ஜிபி இன்டர்நெல் ஸ்டோரேஜ் உடன் வருகிறது. இது அமேசானில் 12,998 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.