இந்தியாவின் முன்னணி தனியார் தொலைத் தொடர்பு நிறுவனங்களில் ஒன்றான ஜியோ உட்பட அனைத்து தொலைத்தொடர்பு நிறுவனங்களும் கடந்த ஜூலை மாதத்தில் கட்டணங்களை அதிகரித்து வாடிக்கையாளர்களுக்கு ஷாக் கொடுத்தன. இதன் காரணமாக, பயனர்கள் பலர் பிஎஸ்என்எல் பக்கம் சாயத்தொடங்கினர். ஆனால், இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமான ஜியோ கட்டணத்தை உயர்த்தினாலும், அவ்வப்போது மலிவான கட்டணத்தில், அதிக நன்மைகளை வழங்கும் ப்ரீபெய்ட் திட்டங்களை தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.
ரிலையன்ஸ் ஜியோ வழங்கும் பிரபலமான 3 திட்டங்களைப் பற்றி இன்று அறிந்து கொள்ளலாம். அதில் பயனர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும்.
ஜியோ ரூ.299 திட்டம்
ஜியோவின் (Reliance Jio) ரூ.299 திட்டம் 28 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இதில் நீங்கள் இந்தியா முழுவதும் எத்தனை அழைப்புகளை வேண்டுமானாலும் செய்யலாம், முற்றிலும் இலவசம். இதில் உங்களுக்கு தினம் 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும். அதாவது ஒரு மாதம் முழுவதும் 42 ஜிபி. இது வீடியோக்களைப் பார்ப்பதற்கும், இணையத்தில் உலாவுவதற்கும் மற்றும் பிற விஷயங்களுக்கும் போதுமானது. இது தவிர, நீங்கள் தினமும் 100 இலவச SMS அனுப்பும் வசதியைப் பெறுவீர்கள், மேலும் ஜியோவின் செயலிகளையும் பயன்படுத்தலாம்.
ஜியோ ரூ.239 திட்டம்
ஜியோவின் ரூ.239 திட்டத்தில் நீங்கள் தினமும் 1.5 ஜிபி அதிவேக இணைய வசதியைப் பெறுவீர்கள். மாதம் முழுவதும் மொத்தம் 33ஜிபி டேட்டா கிடைக்கும். இந்தியா முழுவதும் இலவச வரம்பற்ற அழைப்பு. பிற நகரங்களுக்குச் செல்லும்போது கூடுதல் கட்டணம் இல்லை. இவை அனைத்தும் 22 நாட்களுக்கு கிடைக்கும். அதாவது 22 நாட்கள் வேலிடிட்டி கொண்டது. இந்த திட்டத்தில், இந்தியா முழுவதும் எந்த நெட்வொர்க்கிலும் பேசலாம். இது தவிர, நீங்கள் தினமும் 100 இலவச SMS அனுப்பும் வசதியைப் பெறுவீர்கள்.
ஜியோ ரூ.199 திட்டம்
ஜியோவின் ரூ.199 திட்டம் மிகவும் மலிவான திட்டங்களில் ஒன்று. இதில், நீங்கள் தினம் 1.5 ஜிபி அதிவேக இணைய வசதியைப் பெறுவீர்கள். இந்தியா முழுவதும் எந்த எண்ணிற்கும் வரம்பற்ற அழைப்பு வசதியும் உண்டு. இது தவிர, தினமும் 100 இலவச SMS அனுப்பும் வசதியைப் பெறுவீர்கள். இது 18 நாள் வேலிடிட்டி கொண்ட திட்டமாகும், இதில் மொத்தம் 27ஜிபி டேட்டா கிடைக்கும். பயனர்கள் ஜியோவின் பல செயலிகளையும் இலவசமாகப் பயன்படுத்தலாம்.