Samsung Galaxy S23 Ultra… 60% தள்ளுபடி வழங்கும் Flipkart… மிஸ் பண்ணாதீங்க

Samsung Galaxy S23 FE மாடல் போன், சாம்சங்கின் ப்ரீமியம் போன்களில் ஒன்று. இதில், Samsung Galaxy S23 5G போன்ற பல ப்ரீமியம் அம்சங்களைப் பெறுவீர்கள். இதில் சிறந்த கேமரா, OTT ஸ்ட்ரீமிங்கிற்கான சிறந்த காட்சி அமைப்பு மற்றும் அதிவேக செயல்திறன் கொண்ட செயலி ஆகியவை உள்ளது. 

Samsung Galaxy S23 FE 5G விலையில் வீழ்ச்சி

Samsung Galaxy S23 FE போனின் 256GB மாடல் தற்போது e-commerce வலைத்தளமான Flipkart தளத்தில் ரூ.84,999 விலையில் பட்டியலிடப்பட்ட நிலையில், தற்போது, ​​வாடிக்கையாளர்களுக்கு இதில் 60% பெரும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகையின் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வெறும் 33,999 ரூபாய்க்கு வாங்கலாம்.

சாம்சங் கேலக்ஸி S23 FE 256ஜிபி மாடலில் கிடைக்கும் பிளாட் தள்ளுபடியுடன், வங்கிகள் வழங்கும் ஆஃபர்களும் எக்ஸ்சேஞ்ச் சலுகைகளும் கிடைக்கின்றன. ஆக்ஸிஸ் வங்கியின் கிரெடிட் கார்டு (Axis Bank Credit Card) மூலம் இந்த போனை வாங்கினால் 5% கேஷ்பேக் கிடைக்கும். இந்த போனை கட்டணமில்லா மாதாந்திர EMI கடன் வசதியில் ரூ.5667 என்ற தவணை தொகையில் வாங்கலாம்.

ஸ்மார்ட்போனில் கிடைக்கும் எக்ஸ்சேஞ்ச் ஆஃபர் பற்றி பேசுகையில், உங்கள் பழைய போனை ரூ.20 ஆயிரத்திற்கு மேல் எக்ஸ்சேஞ்ச் செய்யலாம். இருப்பினும், எக்ஸ்சேஞ்ச் சலுகையின் முழு மதிப்பைப் பெற, உங்கள் பழைய ஃபோன் சிறந்த நிலையில் இருக்க வேண்டும். உங்கள் பழைய போன் பழுதடைந்திருந்தால், உங்களுக்கு குறைவான பரிமாற்ற மதிப்பு கிடைக்கும்.

Samsung Galaxy S23 FE போனில் உள்ள சிறப்பு அம்சங்கள்

1. Samsung Galaxy S23 FE போனில் 6.4 இன்ச் டிஸ்ப்ளே கிடைக்கும். டிஸ்ப்ளே பாதுகாப்பிற்காக, கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 வழங்கப்பட்டுள்ளது.

2. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 13 செயலியில் இயங்குகிறது என்றாலும்,  இதை நீங்கள் ஆண்ட்ராய்டு 15 ஆக அப்டேட் செய்யலாம்.

3. ஸ்மார்ட்போனில் சிறந்த செயல் திறன் கொண்ட Snapdragon 8 Gen 1 செயலி உள்ளது.

4. சாம்சங் இந்த போனில் 8ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி வரை சேமிப்பை வழங்கியுள்ளது.

5. புகைப்படம் எடுப்பதற்கு, 50+8+10 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனில் செல்ஃபி மற்றும் வீடியோ அழைப்புக்காக 10 மெகாபிக்சல் கேமரா உள்ளது.

6. ஸ்மார்ட்போனை இயக்க, இது 4500mAh பேட்டரியுடன் வழங்கப்படுகிறது. இது 25W பாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.