அல்லு அர்ஜுனுக்கு தெலுங்கானா உயர்நீதிமன்றம் இடைக்கால ஜாமீன் வழங்கியது. ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கில் டிசம்பர் 4ம் தேதி இரவு புஷ்பா-2 படத்தின் சிறப்புக் காட்சி திரையிடப்பட்டது. இதைப் பார்க்க அல்லு அர்ஜுன் சென்ற நிலையில் அவரை சூழ்ந்துகொண்டு அவரது ரசிகர்கள் அதிகளவில் அந்த திரையரங்கிற்குள் நுழைந்ததில் ரேவதி என்ற 39 வயது பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். இந்த விவகாரத்தில் அந்த திரையரங்க உரிமையாளர் மற்றும் அல்லு அர்ஜுன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்கு […]
