திருவள்ளூர்: செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் மற்றும் வீராணம் ஏரிகளில் நீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டு உள்ளது. சென்னையின் குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியானது 25.51 சதுர கி.மீ பரப்பளவில் குன்றத்தூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஏரியின் நீர் மட்ட மொத்த உயரம் 24 அடியாகும். இதன் முழு கொள்ளளவு 3645 மில்லியன் கன அடியாகும். வியாழக்கிழமை (டிச.12) நீர் இருப்பு 21.90 […]