புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்ப இறுதித் திகதி டிசம்பர் 31

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாட்டு வேலைவாய்ப்பில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை நவம்பர் மாதம் ஆரம்பிக்டகப்பட்டுள்ளதுடன், அதன் இறுதித் திகதி 2024 டிசம்பர் மாதம் 31ஆம் திகதியுடன் முடிவடையும் என்று, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அறிவித்துள்ளது.

அத்துடன், புலம்பெயர் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு இந்தப் புலமைப்பரிசில் வழங்கப்படுவது குறித்து பாடசாலை மட்டத்தில் அறிவுறுத்துவதற்கு அதிபர்கள் கவனம் செலுத்த வேண்டும் என்றும் பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் நிகழ்நிலை ஊடாக விண்ணப்பிக்க முடியும். தகுதியுடைய பிள்ளைகள் www.slbfe.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று இந்த பெறுமதியான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, அதற்காக விண்ணப்பிக்குமாறு பணியகம் கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விபரங்களை 011 2365471 என்ற இலக்கத்திற்கு அழைப்பதன் மூலமோ அல்லது www.slbfe.lk என்ற பணியகத்தின் இணையத்தளத்திற்குச் செல்வதன் மூலமோ பெற்றுக் கொள்ள முடியும் என்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.