செல்வராகவன் திரைப்படத்தின் கதாநாயகனாகிறார் ஜி.வி. பிரகாஷ்!
செல்வராகவான் இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் நடிக்கும் திரைப்படம் குறித்தான அறிவிப்பு தற்போது வெளியாகியிருக்கிறது. இப்படத்திற்கு `மெண்டல் மனதில்’ எனப் பெயரிட்டிருக்கிறார்கள்.
செல்வராகவன் இயக்கத்தில் கடந்த 2022-ம் ஆண்டு `நானே வருவேன்’ திரைப்படம் வெளியானது. இத்திரைப்படத்திற்குப் பிறகு இந்தப் ப்ராஜெக்ட்டை கையில் எடுத்திருக்கிறார் செல்வராகவன். இதில் இன்னொரு சுவாரஸ்யமான தகவல் என்னவென்றால் இத்திரைப்படத்திற்கு ஜி.வி இசையமைக்கிறார். அதுமட்டுமல்ல, அவரே இத்திரைப்படத்தை தயாரிக்கிறார். செல்வராகவன் இயக்கத்தில் வெளியான `ஆயிரத்தில் ஒருவன்’, `மயக்கம் என்ன’ திரைப்படங்களுக்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைத்திருக்கிறார்.
அத்திரைப்படங்களுக்கு இசையமைத்த நினைவுகள் குறித்து சமீபத்திய நேர்காணல்களில் ஜி.வி பகிர்ந்த விஷயங்கள் பயங்கர வைரலானது. `மெண்டல் மனதில்’ திரைப்படத்தை தாண்டி `கிங்ஸ்டன்’, `இடி முழக்கம்’, `ப்ளாக் மெயில்’ போன்ற திரைப்படங்களையும் தன்னுடைய லைன் அப்பில் வைத்திருக்கிறார் ஜி.வி. இத்திரைப்படத்தின் அறிவிப்பு தொடர்பாக பதிவிட்டுள்ள ஜி.வி, “ இது செல்வராகவனுடைய லவ் ஸ்டோரி. இத்திரைப்படம் லவ் மியூசிகல் ஜர்னியாக இருக்கும். இந்த லெஜெண்ட்டுன் மீண்டும் இணைந்ததில் மகிழ்ச்சி!’ எனப் பதிவிட்டிருக்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்… புத்தம் புதிய விகடன் ப்ளே… உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்…